Site icon Tamil News

ஜெர்மனியில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் – பல்லாயிரம் யூரோக்கள் மாயம்

ஜெர்மனியில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலையின் வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகையான பணத்தை மோசடி செய்துள்ளார்.

ஃபெலன்ஸ்போர்க் என்ற பிரதேசத்தில் ஓர் பாடசாலையில் மையாற்றுகின்ற அதிபர் பாடசாலைக்குரிய வங்கி கணக்கில் இருந்து 44454 யுரோக்களை களவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது இந்த பாடசாலை வங்கி கணக்கை சொந்த கணக்காக பாவித்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த அதிபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கொடுக்கல் வாங்கல் கணக்குகளை மீள் பரிசோதனை செய்யும் பொழுது இந்த மோசடி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் வங்கி கணக்கில் இருந்த 44454 யுரோவை அவர் அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காக செலவு செய்தமை தெரியவந்துள்ளது.

அதிபரின் இத்தகையான செயலால் பாடசாலை நிர்வாகம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த அதிபரின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version