Site icon Tamil News

ஷெங்கன் விசா ஒத்திசைவால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!

GCC குடிமக்களுக்கான ஷெங்கன் விசா விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் மாற்றியமைத்துள்ளது. இது அதிகளவிலான மாணவர்களை ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெங்கன் விசா குறித்த புதிய நடைமுறை இந்த மாத்தின் (05) தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் குடிமக்கள், முதலில் குறுகிய விசாக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டியதற்குப் பதிலாக, ஷெங்கன் பகுதியில் நுழைவதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஐரோப்பாவிற்கு தங்கள் படிப்பு மற்றும் இன்டர்ன்ஷிப்பிற்காக வர விரும்பும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது மிகவும் நல்ல விடயம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பிரித்தானியா பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் UAE மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குவைத் மற்றும் கத்தார் நாட்டினருக்கு இந்த ஐரோப்பிய ஒன்றிய செயல்முறை கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதற்கிடையில் தொழில்முனைவோர்கள் அடிக்கடி ஒரே விசாவை கேட்பது சில சமயங்களில் பிரச்சினையாக இருப்பதாக டி மாயோ தெரிவித்துள்ளார்.

ஷெங்கன் நாடுகளில் அயர்லாந்து, சைப்ரஸ், பல்கேரியா மற்றும் ருமேனியா தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அடங்குகின்றன.

ஷெங்கன் விசா அனுமதியில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

மல்டிபிள்-என்ட்ரி விசாக்கள் 180 நாட்களுக்குள் ஷெங்கன் பகுதிக்குள் ஒரே நேரத்தில் 90 நாட்களை, தேவைக்கேற்ப பலமுறை செலவிட அனுமதிக்கின்றன. நீண்ட காலம் தங்குவதற்கு, பார்வையாளர்கள் நீண்ட கால விசாக்கள் அல்லது வதிவிட அனுமதிகளை கோர வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய விசாக் குறியீட்டின் கீழ், பயணிகள் முதலில் குறுகிய கால விசாவைக் கேட்க வேண்டும். அவர்களின் விசா வரலாற்றைப் பொறுத்து, அவர்களுக்கு படிப்படியாக நீண்ட விசாக்கள் வழங்கப்படலாம், ஒரு வருடம் தொடங்கி, பின்னர் இரண்டு ஆண்டுகள், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.

கத்தார் மற்றும் குவைத் குடிமக்கள் நேரடியாக ஐந்து வருடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முன்னதாக இவர்கள் ஒரு வருடத்திற்கு விண்ணப்பிக முடியுமாக இருந்தது.

இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையான நிதி இருப்பு

விசா வழங்கும் அதிகாரிகள் விண்ணப்பதாரரிடம் தங்கியிருக்கும் காலம் மற்றும் அவர் பிறந்த நாட்டிற்கு அல்லது வசிப்பிடத்திற்குத் திரும்புவதற்குப் போதுமான வாழ்வாதாரம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இது அனைத்து விசா தேவைப்படும் நாடுகளுக்கும் பொருந்தும்.

விசா கட்டணம் தற்போது €80 ($86) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version