Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதியின் தகைமையை சவாலுக்கு உட்படுத்திய மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தகுதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுவை உயர் நீதிமன்றம் கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரித்துள்ளது.

சட்டத்தரணி ஒருவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமேசிங்கின் தகுதியை சவால் செய்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது,

உயர்நீதிமன்றம், 50 ஆயிரம் ரூபாய் வழக்கு கட்டணத்துக்கு உட்பட்டு மனுவை நிராகரித்தது.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதியரசர்களையும் பதில் காவல்துறைமா அதிபரை நியமிக்ககத் தவறியதன் ஊடாக அவர் அரசியலமைப்பை மீறியுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார்.

அத்துடன், பதில் காவல்துறைமா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிடக்கோரியும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே, மனுவில் தவறான தகவல்கள் இருப்பதாகவும், அரசியலமைப்பின் 92 வது சரத்தை மீறுவதாகவும் வாதிட்டார்.

Exit mobile version