Tamil News

‘கோட்’ படத்தில் தளபதியுடன் நடித்திருக்கும் சஞ்சய்? உண்மை என்ன?

தளபதி விஜய்யுடன் சேர்ந்து, ‘கோட்’ படத்தில் அவரின் மகன் சஞ்சய் நடித்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டுவருகின்றது.

இவர் தற்போது நடித்து வரும் ‘கோட்’ திரைப்படம் மற்றும் ‘தளபதி 69’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கும் படங்களாக உள்ளன.

AI உட்பட பல அதிநவீன டெக்னாலாஜியை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், தளபதியின் பிறந்தநாள் அன்று ‘கோட்’ படத்தில் விஜய் யுவன் இசையில் பாடியுள்ள மெலடி பாடலான இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி… இப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வந்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது தளபதி மகன் சஞ்சய் தான், ‘கோட்’ படத்தில் விஜய்க்கு டூப் போட்டுள்ளதாக பரவி வரும் தகவல் செம்ம ஹை லைட்டாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் விஜய் அப்பா – மகன் ரோல்களில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே நமக்கு தெரிந்த விஷயம் தான். அப்பா கெட்டப்பில் மீசை தாடியோடு நடித்துள்ள விஜய், மகன் கெட்டப்பில் நடிக்க மீசை தாடி என எதுவுமில்லாமல் க்ளீன் ஷேவ் செய்து உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். திரையில் மகன் மட்டும் தனியாக வரும் காட்சியில் தான் தளபதி இப்படி நடித்துள்ளாராம்.

ஆனால் அப்பாவும், பையனும் வரும் காட்சிகளில் ஒரே நேரத்தில் இரண்டு கெட் அப் களை மாற்ற வேண்டிய சூழல். அதிலும் மகன் விஜய் க்ளீன் ஷேவில் இருக்கும்போது அப்பாவாக ஒட்டு தாடி, மீசையுடன் நடித்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்த வெங்கட் பிரபு, விஜய் சாயலில் இருக்கும் அவர் மகன் சஞ்சய்யை டூப் போட வைக்கலாமா என தயங்கியபடி விஜய்யிடம் கேட்க அதற்க்கு நீங்க அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என கூறி விட்டாராம்.

வெங்கட் பிரபுவுக்கு பேச சொல்லியா தரவேண்டும்? எப்படியோ விஜய் மகனின் சம்மதத்தை பெற்று அவரையே அப்பாவுக்கு டூப்பாக மாற்றி விட்டார். இப்படி ஒரு ட்விஸ்டை ரசிகர்கள் கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அப்பா விஜய்யாக ஒரிஜினல் தாடி, மீசையுடன் நடிக்கையில் அவரோடு மகன் ரோலுக்காக நடித்தவர் சஞ்சய் தான். ஆனால் திரையில் பார்க்கையில் சஞ்சய் வரமாட்டார், அவரது இடத்தில் க்ளீன் ஷேவ் லுக் விஜய் தான் வருவார்.

அதாவது எந்திரன் படத்தில் சிட்டி ரஜினிக்காக எப்படி பாரதி ராஜா மகன் மனோஜ் டூப் போட்டு நடிக்க, பின்னர் நமக்கு அதை கிராபிக்ஸில் மாற்றி ரஜினியாக காட்டினார்களோ அதே பழைய டெக்னாலஜி தான் பாஸ்.

விஜய்க்கும் மற்றவர்கள் டூப் போட்டு தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பதை விட தன்னுடைய மகனே நடித்ததை மிகவும் கம்போர்ட்டாக உணர்ந்தாராம். குறிப்பாக கோட் படத்தில் இருந்து வெளியான அப்பா – மகன் பைக் ரைடிங் போஸ்டரில் கூட… பின்னால் அமர்ந்திருக்கும் மகன் முகம் பார்ப்பதற்கு, சஞ்சய் முகம் மாதிரியே இருந்ததாக பல ரசிகர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. திரையில் முகம் தெரியாவிட்டாலும் அப்பாவுடன் சேர்ந்து சஞ்சய் நடிப்பிலும் அசத்திட்டார் என்கிற தகவல் தீயாக பரவ துவங்கியுள்ளது.

 

Exit mobile version