Tamil News

பாலிவூட்டில் கலக்க அடியெடுத்து வைக்கினறார் சமந்தா… அதுவும் யார் கூட தெரியுமா?

பாலிவுட் திரையுலகில் ஒரே ஆண்டில் மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கான், அடுத்ததாக கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பணிகள் ஒருபுறம் பிசியாக நடந்து வரும் நிலையில், மற்றுமொரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம் ஷாருக். அப்படத்தை டுங்கி படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தான் இயக்க உள்ளாராம்.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி நடிகை சமந்தா தான் ஷாருக் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளாராம்.

இதன்மூலம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர். கடந்த படத்தில் நயன்தாரா, தற்போது சமந்தா என தொடர்ந்து தமிழ் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ஷாருக்.

Exit mobile version