Site icon Tamil News

ராமராஜனின் சாமானியன் படத்தில் “தலைவர் பிரபாகரன்”… நீங்களே பாருங்க..

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

63 வயதிலும் ராமராஜன் வங்கி கொள்ளை கதையை எடுத்துக் கொண்டு தூள் கிளப்ப தயாராகி விட்டார். கடந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் கதை போலவே கிட்டத்தட்ட இந்த படத்தின் கதையும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சாமானிய மக்களிடம் இருந்து வங்கிகள் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கும் பணத்தை அந்த மக்களுக்கே ராமராஜன் போராளியாக மாறி திருப்பிக் கொடுக்க போராடும் கதை தான் சாமானியன் என்கின்றனர்.

ராமராஜனின் இந்த மிஷன் இம்பாசிபிலுக்கு துணையாக ராதா ரவி மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ளனர். தனது மகளை வளர்த்து ஆளாக்கும் தந்தை மகளின் பிரிவால் எடுக்கும் விஸ்வரூப முயற்சி தான் இந்த வங்கியில் நடைபெறும் கொள்ளையை தடுப்பது என்பது போல டிரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ளார். பல பிரபலங்கள் நடித்துள்ள சாமானியன் திரைப்படத்துக்கு எப்போதும் ராமராஜன் படங்களுக்கு இசையமைக்கும் இளையராஜாவே இந்த முறையும் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் போராளியாக மாறுவது மட்டுமன்றி போராளிகளின் கதைகளையும் படிக்கின்றார் இவர். அதிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புத்தகம் மற்றும் ஃபிடெல் காஜ்ட்ரோ ஆகியோரின் புத்தகங்களையும் படிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version