Site icon Tamil News

அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தை எதிர்த்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கடந்த 1996-ம் ஆண்டு ரஷ்யா-அமெரிக்கா இடையே பனிப்போர் மூண்ட காலத்தில் உலக அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (சி.டி.பி.டி) கையெழுத்திடப்பட்டு உலகநாடுகள் கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி உலகநாடுகள் அணு ஆயுத சோதனையில் ஈடுபட கூடாது என கூறப்பட்டு வந்தது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து வருவதாக கூறப்பட்டாலும் சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை.

இந்த நிலையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தை எதிர்த்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இரு அவைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தற்போது இறுதி ஒப்புதலுக்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறுகையில், “உலகளாவிய அணுசக்தி சோதனை தடையை ரஷ்யா மதிக்கும். அணுசக்தி சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா தயாராகவும் இருக்கும்” என்றார்.

Exit mobile version