Tamil News

சர்வதேச அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோட்டாபயவின் புத்தகம்: ரஷ்ய தூதரகம் பகிரங்க கேள்வி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதிய புத்தகம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அந்தப் புத்தகத்தில் கோட்டபாய, தான் 2022 இல் இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு‍ சர்வதேச அனுசரணையுடனான “சதிப் புரட்சியே” காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது புத்தகத்தில் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் இராணுவப் பொருட்களைப் பார்வையிடுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதியின் யோசனை குறித்து இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம், ‘எக்ஸ்’ பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது.

”அதில் ராஜபக்சவின் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகம் பற்றி இலங்கை பத்திரிகைகளில் வெளியானதை கவனித்தேன், அங்கு வெளிநாட்டு தூதர்கள் இலங்கை இராணுவப் பொருட்களை பார்வையிடுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எந்தெந்த நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்? என ரஷ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.

Exit mobile version