Site icon Tamil News

அதிபர் கிம்முடன் ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி ஷெர்ஜி ஷோய்கு சந்திப்பு

கொரிய தீபகற்பம் 1953ம் ஆண்டு வடகொரியா மற்றும் தென்கொரியா என இரண்டாக பிரிந்தது. இருந்தும் இரண்டு நாடுகளும் ஒரே நாளில் தன் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் இருநாடுகள் பிரிந்து 70 ஆண்டுகள் கடந்ததை நினைவுக்கூரும் வகையில் வடகொரியா அரசு பிரமாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளது. இதில் வடகொரியா அரசு தனது நட்பு நாடுகளான ரஷ்யா, சீனா நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் வடகொரியாவின் அழைப்பை ஏற்று ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி ஷெர்ஜி ஷோய் கு அரசுமுறை பயணமாக வடகொரியா சென்று உள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் வுன்னை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை மந்திரி ஷெர்ஜி ஷோய்கு சந்தித்தார்.

ரஷ்ய அதிபர் புதின் வழங்கிய கடிதத்தை கிம்மிடம் ஒப்படைத்ததாக அந்த அறிக்கை கூறுகிறது. ஷோய்கு தலைமையிலான இராணுவக் குழுவை அனுப்பியதற்காக புதினுக்கு கிம் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பு வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான “பாரம்பரிய நல் உறவுகளை மேலும் ஆழப்படுத்தியது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version