Site icon Tamil News

போர் விவகாரம் : ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை குறித்த வழக்கை வென்ற ரஷ்ய தொழிலதிபர்கள்!

ரஷ்ய தொழிலதிபர்கள் மைக்கேல் ஃப்ரிட்மேன் மற்றும் பீட்டர் அவென் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்த வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

புடின் தனது படைகளை உக்ரைனுக்குள் நுழைய உத்தரவிட்டதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பல சுற்று தடைகளை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் எரிசக்தித் துறை, வங்கிகள், உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்க நிறுவனம், வணிகங்கள் மற்றும் சந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளன.

மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட ரஷ்ய அதிகாரிகளை சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகளுக்கு உட்படுத்தியுள்ளன.

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன.

இதன்போது  ஆல்ஃபா குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை தாங்கிய குறித்த இருவரும் அதில் இருந்து விலகி போரில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version