Site icon Tamil News

ஆப்பிரிக்க தலைவர்களின் விஜயத்தின்போது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா!

கியேவ் மீதான ஏவுகணைத் தாக்குதல், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதிக்கான  “நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆப்பிரிக்கத் தலைவர்களின் தூதுக்குழு இன்று (16) கியேவிற்கு பயணம் செய்துள்ளனர்.இதன்போது கீயேவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குல்களை அவர்கள் பார்வையிட்டனர்.

 

அதேநேரம் அவர்களுடைய விஜயத்தின்போதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர்கள் கட்டாய பதுங்கு குழிக்குள்  தங்குமாறு  கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்ற செய்தியை ஆப்பிரிக்காவிற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதேவேளை ஆறு ரஷ்ய கலிபர் ஏவுகணைகள், ஆறு கின்சல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு உளவு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

 

“நமது தலைநகருக்கு ஆப்பிரிக்கத் தலைவர்களின் வருகைக்கு மத்தியில், சில வாரங்களில் கிய்வ் மீது மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடுப்பதன் மூலம் புடின் நம்பிக்கையை உருவாக்குகிறார்.” என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.

Exit mobile version