Site icon Tamil News

மேற்கத்தேய நாடுகளின் பொருளாதர தடைகளை மீறி ட்ரோன்களை பெறும் முயற்சியில் ரஷ்யா!

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை மற்றும் இராணுவம் மேற்கத்திய தடைகளை மீறி கஜகஸ்தான் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து ட்ரோன்களைப் பெற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

(OCCRP) மற்றும் Der Spiegel இதழ் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு, அஸ்பான் அர்பா என்ற  நிறுவனத்திடம் இருந்து ரஷ்யா 500 ட்ரோன்களை இறக்குமதி செய்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம், சுரங்கம், கட்டுமானம், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்களை வழங்குவதாகவும் தெரிவித்தது.

இதற்கிடையே ஈரான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் ரஷ்யா ட்ரோன்களை பெற்று வருகிறது. மேலும் தற்போது நடைபெற்று வருகின்ற போரில் பயன்படுத்த ரஷ்யாவிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போர் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ரஷ்யா நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை பெற முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version