தடையின்றி எரிபொருளை வழங்க முன்வந்துள்ள ரஷ்யா – இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால்!

இந்தியாவிற்கு தடையின்றி எரிபொருளை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி  புட்டின் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மொஸ்கோவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு அமெரிக்கா இந்தியாவிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக 50 சதவீதம் வரி விதிப்பையும் மேற்கொண்டிருந்தது. இருப்பினும் இந்தியா ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தி வருகிறது.