Site icon Tamil News

ஆளுங்கூட்டணி எதிர்பார்த்த முன்னணியில் இல்லை – இந்தியப் பங்குச் சந்தையில் பாரிய சரிவு

ஆளுங்கூட்டணி எதிர்பார்த்த முன்னணியில் இல்லாத நிலையில் இந்தியப் பங்குச் சந்தைகள் 4 ஆண்டில் இல்லாத அளவு சரிந்துள்ளன.

இந்தியப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கூட்டணி எதிர்பார்த்தது போல் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது தற்போது வாக்கு எண்ணிக்கையில் தெரிகிறது.

ஆட்சி முறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எண்ணி முதலீட்டாளர்கள் அச்சத்தில் பங்குகளை விற்பதால் பங்குச் சந்தை நிலையற்று இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க நேர்ந்தால் அது கடந்த பத்தாண்டுகளில் இருந்த அளவு வலுவாக இருக்க வாய்ப்பில்லை என்பது நிபுணர்கள் கணிப்பு.

அது பங்குச் சந்தையில் பிரதிபலித்திருக்கிறது. சில நாள்களுக்கு முன் வெளியான கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

அதையடுத்து திங்கட்கிழமை இந்தியப் பங்குச் சந்தை உச்சம் தொட்டது.

 

Exit mobile version