Site icon Tamil News

இலங்கை அணியுடனான தோல்விக்கு காரணத்தை கூறிய ரோஹித்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. அடுத்ததாக மூன்றாவது போட்டி வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” இந்த இரண்டாவதுஒரு நாள் போட்டியில் நாங்கள் நினைத்தது போல செயல்பட்டு வெற்றிபெறவேண்டும் என்று நினைத்தோம். ஆனால், இன்று அதைச் செய்யத் தவறிவிட்டோம்.

சில காரணங்களால் இந்த போட்டியை வெல்ல முடியவில்லை. எங்களுடைய அணி வீரர்களுக்குநான் சொல்லி கொள்வது ஒன்று தான். என்னவென்றால், உங்களுக்கு முன்னால் இருப்பதை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். இடது-வலது, வேலை நிறுத்தத்தை சுழற்றுவது சற்று எளிதாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். வரும் போட்டிகளில் அது போன்ற தவறுகளை திருத்திக்கொள்வோம்.

போட்டியில் நான் 64 ரன்கள் எடுத்ததற்குக் காரணம் நான் பேட்டிங் செய்த விதம்தான். நான் அப்படி பேட் செய்யும்போது ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும், அதைச் செய்ய நான் பயப்படவில்லை. நீங்கள் வெளியேறும் போதெல்லாம், நீங்கள் 100, 50 அணிக்கு கொண்டு வர முயற்சி செய்யவேண்டும். என்னை பொறுத்தவரை இந்த போட்டியில் நாங்கள் ஒழுங்காக கிரிக்கெட் விளையாடவில்லை, அதன் காரணமாக தான் நாங்கள் ஆட்டத்தை இழந்தோம்” எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Exit mobile version