Site icon Tamil News

இலங்கையில் நூதனமாக இடம்பெறும் கொள்ளை : நட்பாக பழகுவோரிடம் எச்சரிக்கை அவசியம்!

இலங்கையின் மேல்மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணித்தவர்களை மயக்கமடைய செய்து அவர்களிடம் இருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணை நடத்திய பொலிஸாரின் கூற்றுப்படி, மக்களை மயக்கமடைந்து 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்தை தம்பதியினர் அபகரித்துள்ளனர்.

குறித்த தம்பதிகளிடம் இருந்து 15 இனந்தெரியாத போதைப்பொருள், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி, நிறைய தங்கம் மற்றும் 04 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் கண்டி பிரதேசத்தை வசிப்பிடமாகவும், அரச நிறுவனமொன்றில் எழுத்தராகவும் கடமையாற்றுபவர் எனவும், குறித்த பெண் அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

ராஜகிரிய, உஸ்வத்த பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் முறைசாரா உறவைப் பேணிக் கொண்டே இந்தக் கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர்.

வெலிக்கடை, கொழும்பு கோட்டை, வாதுவ, மலகம, வெள்ளவத்தை போன்ற பகுதிகளில் சந்தேகநபர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் நெடுஞ்சாலையில் பயணிப்போரிடம் நட்பாக பழகி உண்ண கொடுத்து அவர்களை மயக்கமடைய செய்கின்றனர். பின்னர் அவர்களிடம் இருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version