Site icon Tamil News

கனமழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஜப்பானின் சாலைகள்

ஜப்பானில் 3 நாட்களாக பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டல புயலான மார்வார் நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவால் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜப்பானில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனிடையே நாட்டின் மேற்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version