Site icon Tamil News

ஜெர்மனியில் சமூக உதவி கொடுப்பனவு நிறுத்தப்படும் அபாயம்

ஜெர்மனியில் சமூக உதவி நிறுவனம் விடுக்கின்ற வேண்டு கோள்களை நிறைவுற்ற தவறுவோரின் மாதாந்தம் கொடுப்பனவு என்பது நிறுத்தப்படுவதற்கான அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்களுக்கு சமூக திணைக்களமானது குறிப்பிட்ட வேண்டுதலை விடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவர்களிடம் வேண்டுகுாள் விடுக்கும் பட்சத்தில் இவர்கள் இந்த வேண்டுதலை நிறைவேற்றாவிட்டால் அதி உயர் தொகையாக அவர்களுக்கு வழங்குகின்ற பணத்தில் 30 சதவீதமான பணத்தை திணைக்களமானது குறைத்து வழங்க முடியும்.

அதாவது ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வுபேற்றாவில் அமைந்துள்ள சமூக உதவி திணைக்களமானது இவ்வாறு சமூக உதவி பணத்தை பெறுகின்றவர்களுக்கு குறித்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Exit mobile version