Site icon Tamil News

ரிஷி சுனக்கின் ருவாண்டா மசோதா : 03ஆவது வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றது!

ரிஷி சுனக்கின் ருவாண்டா மசோதா நாடாளுமன்றமத்தில் இடம்பெற்ற மூன்றாவது வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றது.

இதற்கு ஆதரவாக 44 சதவீதமான வாக்குகள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொழிற்கட்சி மற்றும் SNP பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர், ஆனால் மசோதாவை செல்லுப்படியற்றதாக மாற்றுவதற்கு 33 டோரி எம்பிகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களில் முன்னாள் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் மற்றும் முன்னாள் குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் ஆகியோர் அடங்குவர்.

ஒருவேளை இந்த வாக்கெடுப்பில் ரிஷி சுனக் தோல்வியை சந்தித்திருந்தால், பொதுத் தேர்தலுக்காக எதிர்கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கையை வலுப்படுத்தியிருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version