Tamil News

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

சிலுவையில் அறையப்பட்ட ஜேசுபிரான் உயிர்த்தெழுந்த அற்புதத்தினை கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றைய தினம் கிறிஸ்தவ மக்களினால் கொண்டாடப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு வழிபாட்டின்போது குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இம்முறை உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொஷான் மகேசனின் தலைமையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்காக விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டதுடன் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் வழிபாடுகள் நிறைவடையும் நேரத்தில் மட்டும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவாலயத்தின் பாதுகாப்பிற்கு வருகைதந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Exit mobile version