Site icon Tamil News

இந்தியாவின் விழுப்புரம் கடற்கரை அருகே அரிய வகை பொருட்கள் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரை ஓரத்தில் 5 துண்டுகளாக அரியவகை பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இதனை அப்பகுதி மீனவரான காளிதாஸ் என்பவர் பார்த்துவிட்டு உடனடியாக அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த பகுதிக்கு வந்த மீனவர்கள் கடலில் ஒதுங்கிய அரிய வகை பொருளை பையில் சேகரித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வருவாய்த்துறை அலுவலர்கள் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வனத்துறை அதிகாரி கண்ணப்பன் மற்றும் கோட்டக்குப்பம் பொலிஸார் ஆகியோர் அரிய வகை பொருளை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது குறித்த அரியவகை பொருளானது திமிங்கலத்தின் எச்சம் என்பது தெரியவந்தது.  இதனை அம்பர் கிரீஸ் எனவும் அழைக்கின்றனர். இதன் மாதிரி கல்கத்தாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

இந்த அரியவகை பொருள் திமிங்கலத்தின் எச்சம் அதாவது அம்பர் கிரீஸ் என்பது கண்டறியப்பட்டால் இதனுடைய மதிப்பு சுமார் 3.5 கோடி என கூறப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்  கூனிமேடு கடல் பகுதியில் இதே போன்ற பொருள்கள் ஒதுங்கியது. பின்னர் அதன் மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அது திமிங்கலத்தின் எச்சம் என கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version