மீளவும் திறக்கப்படும் பாடசாலைகள் – சீருடைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

டித்வா பேரிடரை தொடர்ந்து நாளைய தினம் மீளவும் பாடசாலைகளை திறக்க கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளை இன்று மேற்கொள்ள அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை தவிற ஏனைய பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களுக்கும், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் பாடசாலை சீருடைகள் தொடர்பாக தளர்வான கொள்கையை செயற்படுத்தவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.