Site icon Tamil News

சிங்கப்பூரில் சொகுசு வீடுகளுக்கான வாடகை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் பெரிய சொகுசு வீடுகளின் வாடகை தொடர்ந்து அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

எனினும் பெரும் செல்வந்தர்கள் அத்தகைய வீடுகளுக்குப் பெரிய வாடகை தரத் தயாராக இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வீடுகளின் வாடகை வெகுவாக உயர்ந்தது. ஆனால் இவ்வாண்டு வாடகை பெரிதாக உயரவில்லை. கூட்டுரிமை வீடுகளின் வாடகை கடந்த ஆண்டு சுமார் 8 சதவீதம் உயர்ந்தது. இவ்வாண்டு 6 சதவீதம் உயர்ந்தது.

தரைவீடுகளின் வாடகை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. பெரிய வீடுகளின் வாடகை மிக அதிகமாக உயர்கிறது. அத்தகைய சொகுசு வீடுகளின் எண்ணிக்கை குறைவு. அவற்றை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாடகை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது.

இவ்வாண்டு ஆரம்பத்தின் கணக்குப்படி சிங்கப்பூரில் 73,000 தரைவீடுகள் உள்ளன. மொத்தத் தனியார் வீடுகளின் எண்ணிக்கையில் அது 20 சதவீதத்திற்கு குறைவாகும்.

Exit mobile version