Tamil News

ரெமல் புயல்: வடகிழக்கு மாநிலங்களில் நிலச்சரிவு,வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் பலி

ரெமல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 4 நாள்களாக ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம், கனமழைக்கு இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரெமல் புயல் தாக்கம் காரணமாக மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்கள், அசாம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

அசாம், மேகாலயா வழியாக பாயும் கோபிலி ஆறு அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளதால் அசாமில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு 9 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Heavy rains trigger landslide, floods in Indonesia; 41 dead - The Globe and  Mail

மணிப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் இம்பாலில் வெள்ளம் புகுந்ததால் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரமில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன பலரை தேடும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ரெமல் புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு, சுவர் இடிந்து விழுந்தது, மின்சாரம் தாக்கியது என பல்வேறு நிகழ்வுகளில் இதுவரை சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version