Site icon Tamil News

உக்ரைன் குத்துச்சண்டை சாம்பியன் ஒலெக்சாண்டர் உசிக் விடுதலை

உலக குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான உக்ரைனின் Oleksandr Usyk போலந்து விமான நிலையத்தில் கைதான நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது டெலிகிராம் செயலியில், உக்ரைன் குடிமகன் மற்றும் சேம்பியன் மீதான இந்த அணுகுமுறை கோபத்தை ஏற்படுத்தியதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரும் அவரை இனி கைது செய்ய முடியாது என்றும் ஜெலென்ஸ்கி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 37 வயதான Oleksandr Usyk ஏன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

அவரது மனைவி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், இந்த விவகாரம் தொடர்பில் Oleksandr Usyk கண்டிப்பாக ஊடகங்களை சந்திப்பார் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு புறப்படும் நிலையில் போலந்தின் Krakow விமான நிலையத்தில் வைத்து ராணுவ அதிகாரிகளால் Oleksandr Usyk கைது செய்யப்பட்டார்.

போலந்தின் உள்விவகார அமைச்சர் அல்லது வெளிவிவகார அமைச்சர் என எவரும் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

Exit mobile version