Tamil News

சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து வாக்கெடுப்பு ; போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்

தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த வாக்கெடுப்பின் போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இவ் கைகலப்பு முற்றி நாடாளுமன்றமே போர்க்களமாக காட்சியளித்தது.

சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர்.

தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

Taiwan lawmakers argue and exchange blows during a parliamentary session in Taipei

இன்னும் சில நாட்களில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே அரசை பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல், அரசின் முக்கிய பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற KMT கட்சி முயன்றதே இந்த கைகலப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Exit mobile version