Tamil News

ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டங்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பதிலாக பொது வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய தொகையை சேமிக்க முடியும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா என்ற பரிந்துரைகளை வழங்க சில உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஆட்சி செய்வதற்கு மக்கள் மீண்டும் ஒரு கால அவகாசம் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.

இதற்கு மக்களின் கருத்தை அறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version