Tamil News

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்படி, 650 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

1,050 ரூபாவாக இருந்த சிவப்பு கௌபீயின் விலை 52 ரூபாவினாலும் 1,150 ரூபாவாக இருந்த வெள்ளை கௌபீயின் விலை 50 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 670 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பாஸ்மதி அரிசியின் விலை 20 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் சிறிய வெங்காயம் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 270 ரூபாவாக இருந்த வெள்ளை சீனி மற்றும் 430 ரூபாவாக இருந்த சிவப்பு சீனி என்பவற்றின் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version