Site icon Tamil News

இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடற்படையினருக்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது நாளை (02) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் (03) புயலாக வலுப்பெறவுள்ளது.

இது இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 04 ஆம் திகதி வட தமிழகக் கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

 

Exit mobile version