Site icon Tamil News

இலங்கைக்கு கடுமையான வெள்ளம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

மஹா ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் பல பிரதேச செயலகப் பிரிவுகள் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹா ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.

மேலும், தெந்துரு ஓயா, தப்போவ, வெஹெரலகல, லுனுகம்வெஹர, மவ்ஆர மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகவந்தலாவ மஹஎலியகாடு மற்றும் பகவந்தலாவ பிரதேசம் ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கெசல்கமுஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பகவந்த்லாவ பிரதேசத்தில் பல தாழ்வான நிலங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version