Site icon Tamil News

சீனாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகளின் சாதனை!

சீனாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகள் ஒரே பல்கலைக்கழகத்தில் இணைய தயாராகி வருகின்றது.

அவர்கள் மூவரும் பூச்சொவ் பல்கலைக்கழகத்தில் இணைய அனுமதி பெற்றுள்ளனர்.

Hong Yilan, Hong Qilan, Hong Shenglan ஆகியோர் 2005ஆம் ஆண்டு பிறந்ததாக SCMP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மூவரும் வெவ்வேறு பாடத் திட்டங்களைப் படிக்கவிருக்கின்றனர். 3 சகோதரிகளும் இளம் வயதிலிருந்தே ஒரே பள்ளியில் பயின்றதாக SCMP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

“என்ன ஓர் அதிர்ஷ்டம் ஒன்றாகப் பிறந்து, வளர்ந்த அவர்கள் உலகிலேயே மிக நெருக்கமான உறவை வைத்திருக்கின்றனர்,” என்று அவர்களது தாயார் கூறியிருந்தார்.

மூவரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து பல்கலைக்கழகத்தில் நன்றாகப் படிக்கவேண்டும் என்பதே அவரது விருப்பம். 3 சகோதரிகளின் கதை சீனாவில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

Exit mobile version