Site icon Tamil News

உலகின் வெப்பமான நாள் சாதனை 24 மணி நேரத்தில் முறியடிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் (C3S) படி, பூமி அதன் வெப்பமான நாள் ஜூலை 22 என்று தெரிவித்துள்ளது.உலக சராசரி வெப்பநிலை 17.15 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

24 மணி நேரத்திற்கு முன் கணிக்கப்பட்ட வெப்பமான நாள் சாதனையை முறியடித்துளளது.

ஜூலை 21 அன்று 17.09 டிகிரி செல்சியஸ் என்ற சாதனையை மீறியுள்ளது.

ஜூன் மாதம் தொடர்ந்து 12வது மாதமாக உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை எட்டியது அல்லது அதைத் தாண்டியது முதல் முறையாகும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

C3S இன் முதற்கட்டத் தரவு, குறைந்தபட்சம் 1940க்குப் பிறகு ஜூலை 22 வெப்பமான நாளாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.

நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எரிப்பதாலும், காடுகளை அழிப்பதாலும் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவாக, சுமார் 1,25,000 ஆண்டுகளாக உலக வெப்பநிலை இப்போது மிக அதிகமாக இருப்பதாக C3S தெரிவித்துள்ளது.

“அந்த காலகட்டம் முழுவதும் திங்கள்கிழமை மிகவும் வெப்பமான நாள் என்று விஞ்ஞானிகள் உறுதியாக கூற முடியாது என்றாலும், மனிதர்கள் விவசாயத்தை வளர்ப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே சராசரி வெப்பநிலை இந்த அளவுக்கு அதிகமாக இல்லை” என்று அது கூறியது.

Exit mobile version