Site icon Tamil News

சாதனை படைத்த சமாரி அத்தபத்து

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் தம்புலாவில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் இலங்கை – மலேசியா அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 184 ரன்கள் குவித்தது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தபத்து 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மலேசியா அணி வீராங்கனைகள் இலங்கயின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் 19.5 ஓவரில் 40 ரன்னுக்கு மலேசியா ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சமாரி அத்தபத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மகளிர் டி20 ஆசிய கோப்பையில் முதல் சதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

Exit mobile version