Site icon Tamil News

இந்திய அரசின் உளவு அமைப்பான RAW -வின் புதிய தலைவராக ரவி சின்ஹா ஐ.பி.எஸ். நியமனம்

இந்தியாவின் முதன்மையாக உளவு மற்றும் கொள்கை வகுப்பு அமைப்பான Research and Analysis Wing ரா-வின் புதிய தலைவராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதன்மை உளவு அமைப்புகள் ஐபி மற்றும் ரா. ரா அமைப்பானது உளவு மற்றும் கொள்கை வகுப்பு விவகாரங்களில் முதனமையானது.

இதன் தற்போது ரா அமைப்பின் தலைவராக சமந்த் கோயல் பதவியில் உள்ளார். இவரது பதவிக் காலம் ஜூன் 30-ம் திகதி நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து ரா அமைப்பின் புதிய தலைவராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1988-ம் ஆண்டு சத்தீஸ்கர் பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ரவி சின்ஹா. தற்போது டெல்லியில் ஒன்றிய அமைச்சரவை செயலக செயலாளர் பதவியில் உள்ளார். ரா அமைப்பின் தலைவராக ரவி சின்ஹா, அடுத்த 2 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

1988-ம் ஆண்டு சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா, தற்போது டெல்லியில் அமைச்சரவை செயலகத்தின் சிறப்புச் செயலராக இருந்து வருகிறார். பதவி ஏற்றதில் இருந்து இரண்டு ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை ராவின் தலைவராக தொடர்வார் என்று தெரிவித்துள்ளனர்.

மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா, உளவு மற்றும் செயல்பாடு திறன்களில் திறமை வாய்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக அவரை ரா அமைப்பின் தலைவராக நியமித்து ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழுவின் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version