Site icon Tamil News

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

அயோத்தியில் ராமர் கோயிவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார்.

மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version