Tamil News

Box Office ; பாதியாக குறைந்தது “ஜெய்லர்” இரண்டாம் நாள் வசூல்…

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது நாள் இந்திய வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஆக்சன் டார்க் காமெடி திரைப்படத்தை, ரஜினிகாந்தை வைத்து முதல் முறையாக இயக்கி உள்ளார் நெல்சன் திலீப் குமார். அதேபோல் இந்த படத்தில்  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி செரீப், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், காமெடி நடிகர் யோகி பாபு, விநாயகன், தமன்னா, மிர்ணா, வசந்த் ரவி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் உலகளவில் 95.78 கோடி வசூல் சாதனை செய்தது.

இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 48.35 கோடி வசூல் செய்திருந்த நிலையில்,  இந்தியா முழுவதும் ‘ஜெயிலர்’ திரைப்படம் இரண்டாவது நாள் செய்த வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி முதல் நாளை விட இரண்டாவது நாளின் வசூல் பாதியாக குறைந்துள்ளது. அணைத்து மொழிகளிலும் 27 கோடி மட்டுமே இரண்டாவது நாளில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Exit mobile version