Site icon Tamil News

இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் மேம்படும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டில் மழையுடனான வானிலை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (01.12) அறிவித்துள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில்  100 மி.மீற்றர் கனமழை பெய்யும் எனதெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version