Site icon Tamil News

தென்னாப்பிரிக்காவில் புதிய அரசாங்கத்தின் ஒற்றுமை முயற்சியால் தலைதூக்கும் இனப் பதற்றம்

தென்னாப்பிரிக்காவின் புதிய அரசாங்கத்தில் கறுப்பினத்தவர் ஒருவர் அந்நாட்டு அதிபராகவும் வெள்ளையர் ஒருவர் கூட்டணி ஆட்சியில் இடம்பெறும் கட்சி ஒன்றின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றனர்.

நாட்டின் ஒற்றுமையைச் சித்திரிக்கும் வண்ணம் அந்த ஏற்பாடு இடம்பெற்றது. எனினும், ஒரு காலத்தில் இனவாதக் கொள்கைகள் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தென்னாப்பிரிக்காவில் இப்போது மீண்டும் சில இன ரீதியான கருத்து வேறுபாடுகள் தலைதூக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளையர் ஒருவரின் தலைமையிலான ஒரு கட்சி மீண்டும் ஆட்சியில் இருப்பது குறித்து கறுப்பின தென்னாப்பிரிக்கர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறுபான்மை வெள்ளை இனத்தவரின் தலைமையிலான ‘அப்பாத்தைட்’ ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. எனினும், அந்தக் காலகட்டத்தில் தங்களுக்கு நிகழ்ந்த இன்னல்கள் தென்னாப்பிரிக்காவின் மில்லியன் கணக்கான கறுப்பினத்தவரின் மனதில் இன்னமும் இருக்கிறது. ‘அப்பாத்தைட்’ முடிவுக்கு வந்த பிறகும் அந்நாட்டின் கறுப்பினத்தவர் வறுமை போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

‘அப்பத்தைட்’ முடிவுக்கு வந்த பிறகு தென்னாப்பிரிக்காவில் இப்போது ஆக அதிக எண்ணிக்கையில் வெள்ளை இனத்தவர் அரசாங்கத்தில் மூத்த பொறுப்புகளை வகிக்கக்கூடிய நிலை எழுந்துள்ளது. அந்நாட்டின் 62 மில்லியன் மக்கள்தொகையில் ஏழு விழுக்காட்டினர் மட்டுமே வெள்ளையர்கள் ஆவர்.

எனினும், புதிய கூட்டணி ஆட்சி தென்னாப்பிரிக்காவின் ஒற்றுமையைச் சித்திரிப்பதாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த அதிபர் சிரில் ரமஃபோசாவும் ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக இருக்கும் வெள்ளை இனத்தவரான ஜான் ஸ்டீன்ஹுவீசனும் கூறியுள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பெரும்பான்மை வாக்குகளை இழந்து 30 ஆண்டுகால ஆதிக்கத்ததை நழுவவிட்டது.

Exit mobile version