Tamil News

“ராயன்” இன்று யாருடைய கேரக்டரை தனுஷ் வெளிப்படுத்தினார்…?

நடிகர் தனுஷின் இயக்கத்தில் டி50 படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ், அடுத்தடுத்து படத்தின் இணைந்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இன்றைய தினமும் ராயன் படத்தின் அடுத்த கேரக்டரை தனுஷ் அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகர் சரவணன் கேரக்டர் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இதில் வித்தியாசமான கெட்டப்பில் சரவணன் காணப்படுகிறது. இந்த போஸ்டர்கள் அனைத்தையும் தனுஷ் கருப்பு வெள்ளையில் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள இந்த போஸ்டர்கள் கருப்பு வெள்ளையில் காணப்படுகின்றன. இதன் மூலம் அவர் அழுத்தமான கதைக்களத்தை மேற்கொண்டுள்ளதை குறிப்பிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

படத்தில் ஒவ்வொரு நடிகருக்குமே முக்கியமான கேரக்டர்கள் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக படத்தில் துஷாரா விஜயன் மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் தனுஷ் யாரை அறிமுகப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே காணப்படுகிறது.

Exit mobile version