Site icon Tamil News

ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் படுகொலைக்கு விரைவில் பதிலடி

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவா் சலே அல்-அரூரியும், அவரது 6 பாதுகாவலா்களும் உயிரிழந்தனா்.

மேலும் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பும், லெபனானும் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா ‘ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் படுகொலைக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும்’ என இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று இஸ்ரேல் நாட்டின் மீது 60-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினரின் இந்த தாக்குதலால் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Exit mobile version