Site icon Tamil News

அலெக்ஸி நவல்னியின் உடலை மறைத்து வைத்திருப்பதாக புதின் மீது சாட்டு

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடலை ரஷ்ய அரசாங்கம் மறைத்து வைத்திருப்பதாக நவல்னியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகள் இன்னும் அலெக்ஸி நவல்னியின் உடலை நவல்னியின் தாயார் கிரா யமைஷிடம் ஒப்படைக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நவல்னியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, புடினுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிரான ஆர்வலராகவும் இருந்தவர், ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டதாகவும் நவல்னியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அலெக்ஸி நவல்னியின் மரணத்தை ரஷ்யா அறிவித்தது, மேலும் அவர் ஆர்க்டிக் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version