Site icon Tamil News

அல்லு அர்ஜூனுக்கு “புஷ்பா”வின் பிறந்த நாள் பரிசு… ஆனால் இதுக்கு என்ன பேர்?

அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட்டான திரைப்படம் புஷ்பா. 60 வருட தெலுங்கு சினிமாவில் முதல் தேசிய விருதையும் இப்படம் அல்லு அர்ஜூனுக்கு பெற்றுக்கொடுத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக இருந்தாலும், சமந்தாவின் நடனம் தான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது என ரசிகர்களால் கூறப்படுகிறது.

அதே போல் ஒரு குத்து பாடல் புஷ்பா 2 படத்திலும் இருக்கிறதாம். ஆனால், அதில் சமந்தா நடனமாட வில்லை என்கின்றனர்.

இன்று அல்லு அர்ஜுன் பிறந்தநாள் என்பதால் புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்டனர். செம மாஸாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை மோசம் செய்து விட்டனர் படக்குழு.

இந்த டீசரில் மாஸ் பிஜிம் போட்டு அல்லு வெறும் நடந்து மட்டுமே வருகிறார். வேறு எதுவுமே காட்டவில்லை என ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். ஆனாலும் மறுபக்கம் இதை கொண்டாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version