Site icon Tamil News

அமெரிக்க இராணுவ கேடட்களின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு : க்ரீஸில் வெடித்த போராட்டம்!

அமெரிக்க இராணுவ கேடட்களின் கச்சேரியை தடுக்க முயன்ற கம்யூனிஸ்ட் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.

தற்போது கிரீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராணுவ அகாடமியின் இசைக் குழுவான வெஸ்ட் பாயிண்ட் க்ளீ கிளப் உறுப்பினர்களின் இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக மத்திய கிரேக்க நகரமான லாரிசாவில் வன்முறைப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டமானது உக்ரைனுக்கான இராணுவ ஆதரவு, செங்கடல் பதற்றம், கிரீஸில் அமெரிக்க துருப்புக்கள் இருப்பதை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version