Site icon Tamil News

அயர்லாந்தின் ஒரு பகுதியில் அமுலுக்கு வரும் தடை

அயர்லாந்தில் உள்ள கிரேஸ்டோன்ஸ் என்ற நகரத்தில் சிறுவர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் குழந்தைகளின் பெரும் பொழுதுபோக்காக ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை வைத்துள்ளனர். சில பெற்றோர்களே சிறுவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி கொடுத்து பழக்கப்படுத்துகின்றனர்.

2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகத்தில் 10 வயது வரையுள்ள சிறுவர்களில் 5இல் 2 பங்கினர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி வைத்துள்ளனர். 12 வயதுகளில் 71%, 14 வயது வரையுள்ள சிறுவர்களில் 91% பேர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அயர்லாந்தில் உள்ள ஒரு நகரத்தில் சிறுவர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களே முன்வந்து சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து செயல்படுத்தியுள்ளனர்.

கிழக்கு அயர்லாந்தின் விக்லோ(wicklow) நாட்டில் கிரேஸ்டோன்ஸ் (greystones) நகரம் உள்ளது. இது டப்ளின் என்ற பகுதிக்கு தெற்கே 15 மைல் தொலைவில் உள்ள கடற்கரையோர நகரமாகும். இங்கு சிறுவர்களின் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை அவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி கொடுக்க வேண்டாம் என்று பெற்றோர்களே முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version