Site icon Tamil News

மத்திய லண்டனில் நடந்த ஊர்வலம் : வெள்ளை புறாக்கள் விடுவிப்பு!

40 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் தலைநகரில் உள்ள லிபிய தூதரகத்திற்குள் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் நேற்று (17.04) மத்திய லண்டனில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், வெள்ளை புறாக்களையும் பறக்கப்பட்டு சமாதானத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

25 வயதான கான்ஸ்டபிள் யுவோன் பிளெட்சர், அப்போதைய லிபிய தலைவர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக கட்டிடத்திற்கு வெளியே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, தூதரகத்தின் ஜன்னல்கள் வழியாக சப்மஷைன் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியவர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது பங்கேற்பாளர்கள் பிளெட்சர் இறந்த இடத்தில் உள்ள நினைவுச்சின்னத்தின் அடிவாரத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Exit mobile version