Tamil News

நீண்டநாள் காதலருடன் பிரியா பவானி சங்கர் செய்த சேட்டை.. டிரெண்டாகும் கிளிக்ஸ்

தனது தோழியின் திருமணத்துக்கு காதலருடன் சென்ற நடிகை பிரியா பவானி சங்கர் அந்த திருமணத்தில் ஜாலியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரை நடிகையாக மாறினார். அதன் பின்னர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ராஜ்வேல் ராஜ் என்பவரை காதலித்து வரும் நிலையில், தனது தோழியின் திருமணத்துக்கு காதலருடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், தற்போது தோழியின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செம க்யூட்டாக சேலையில் பிரியா பவானி போஸ் கொடுத்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

அழகான மணப்பெண்ணே காவ்யா, இது உன்னோட திருமணம் தான் என்றாலும், உன்னை விட நாங்க தான் ரொம்பவே ஜாலியா இருந்தோம் என திருமணத்தில் தனது காதலருடன் செய்த சேட்டைகளை எல்லாம் போட்டோக்களாக வெளியிட்டு போஸ்ட் போட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

 

Exit mobile version