Tamil News

மேகன் மீது புகாரளித்த நபருக்கு உயரிய விருது வழங்கிய இளவரசர் வில்லியம்

இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன் அரண்மனை ஊழியர்களுக்கு தொல்லை கொடுப்பதாக புகாரளித்தவர்களில் ஒருவருக்கு உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.

அரண்மனையில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்த Jason Knauf என்பவருக்கு, ராஜ குடும்பத்துக்கு சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் பிரித்தானியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Royal Victorian Order (RVO) என்னும் விருது வழங்கப்பட்டது.நேற்று விண்ட்சர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்த விருதை Jasonக்கு இளவரசர் வில்லியம் வழங்கினார்.

இந்த Jason, இளவரசர்கள் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட், இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இரண்டு தம்பதியரிடமும் பணியாற்றியுள்ளார். கடைசியாக, வில்லியம் கேட்டுடைய Royal Foundation என்னும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி 2021இல் பணியிலிருந்து விலகினார்.

மேகன் மீது புகாரளித்த நபருக்கு உயரிய விருது: இளவரசர் வில்லியம் வழங்கினார் | Top Award To Person Who Reported Megan

ஹரி மேகன் தம்பதியரிடம் பணியாற்றும்போது, 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மேகன் அரண்மனை ஊழியர்களை துன்புறுத்துவதாகவும், பணியாளர்களை பாதுகாக்க அரண்மனை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இளவரசர் வில்லியமுடைய தனிச்செயலருக்கு மின்னஞ்சல் அனுப்பினார் Jason.

அந்த நேரத்தில், அரண்மனை ஊழியர்கள் பலர் மேகன் மீது புகாரளிக்க, ராஜ குடும்பத்திலும் அது எதிரொலித்து, கடைசியாக ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தையும் பிரித்தானியாவையும் விட்டு வெளியேற நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version