Site icon Tamil News

பிரதமர் ரிஷி சுனக் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டின்போது, ஸ்கொட்லாந்து முன்னாள் முதல் அமைச்சரான நிக்கோலா ஸ்டர்ஜன் குறித்து கிண்டல் செய்துள்ளார்.

நிக்கோலா, தான் சார்ந்த கட்சிக்காக நிதி திரட்டியதில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.அது தொடர்பாகவே ரிஷி நிக்கோலாவை கேலி செய்யும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

ரிஷியின் விமர்சனத்தைத் தொடர்ந்து, ஸ்கொட்லாந்தின் Alba party என்னும் கட்சியின் பொதுச் செயலாளரான Chris McEleny என்பவர், ரிஷி மீது ஸ்கொட்லாந்து பொலிஸில் புகாரளித்துள்ளார்.

நிக்கோலா தொடர்பான குற்றச்சாட்டு மீது பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில், ரிஷி அது குறித்து விமர்சித்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி, ரிஷி மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார் Chris McEleny.

இந்த விடயம் குறித்து பிரதமர் இல்லம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Exit mobile version