Tamil News

6 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்துக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி..!

6 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளுகிறார்.

நாளை நியூயார்க்கில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு 22ம் திகதி வெள்ளை மாளிகையில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.பிரதமர் மோடியை கௌரவுரவிக்கும் விதமாக அன்றைய தினம் அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் இரவு விருந்து அளிக்க உள்ளனர்.

மேலும் வாஷிங்டனில் தொழிலதிபர், இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

அமெரிக்க பயணத்தை தொடர்ந்து ஜூன் 24, 25ம் தேதி வரை எகிப்தில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி, எகிப்து நாட்டின் தலைவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதனை தொடர்ந்து 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியை பார்வையிடுகிறார்.அல்-ஹகிம் மசூதிக்குச் செல்லும் பிரதமர் மோடி, முதல் உலகப் போரில் எகிப்துக்காகப் போரிட்டு உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

பின் எகிப்தில் உள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடவுள்ளார்.

பிரதமர் மோடி வருகையை எதிர்ப்பார்த்து, அமெரிக்காவில் வாழும் இந்திய வாழ் மக்கள் மட்டுமின்றி, அமெரிக்க மக்களும் கையில் பிரதமர் மோடி புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திய படி ஆங்காங்கே பேரணியாக சென்று வருகின்றனர்.

மோடி, மோடி என வாழ்த்து கோஷம் எழுப்பினர். பல பெண்கள் விசில் அடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Exit mobile version