Site icon Tamil News

மன்னார் ஆயரிடம் ஆசிபெற்ற ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையைக்கும்  இடையிலான சந்திப்பு இன்று (16) மன்னார் ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ஜனாதிபதி மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகளை பாராட்டிய மன்னார் ஆயர், மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

மன்னாரில் இருந்து பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மன்னாரை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும், உல்லாசப் பயணிகளுக்காக மன்னார் கோட்டையை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த செயற்பாடுகளுடன் எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தின் அனைத்து துறைகளிலும் பாரிய அபிவிருத்திகள் ஏற்படும் என குறிப்பிட்டார்.

Exit mobile version